Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இன்றைய செய்திகள்

Posted on May 17, 2019May 17, 2019 By admin No Comments on இன்றைய செய்திகள்

 

மாலை செய்திகள்

தேர்தல் ஆணைய விதிகளின் படி மதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதம்: தமிழக அரசு வாதம்

மதுரை:

தேர்தல் ஆணைய விதிகளின் படி மதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதமாகும், அதுவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசியது குற்றமாகும் என தமிழக அரசு வாதித்தது. கமல் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு வாதம் செய்தது.

முன்ஜாமின் கேட்டு கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை :

முன்ஜாமின் கேட்டு கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கோட்சேவை பற்றி மட்டுமே கமல் பிரச்சாரத்தின்போது பேசினார், மதங்களை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் எதுவும் பேசவில்லை என்று கமல் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வாதம் நடத்தினர்.

தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது : உயர்நீதிமன்ற கிளை

மதுரை :

தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கமல் முன்ஜாமின் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான ஆவணங்களை முன்னாள் நீதிபதியிடம் ஒப்படைத்தார் நாசர்

சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான ஆவணங்களை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் ஒப்படைத்தார். இதன்மூலம் நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

கோட்சே பற்றிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்

போபால்:

கோட்சே பற்றிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் கூறினார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி எனவும், அவரை போற்றுவது தேசபக்தியல்ல, தேசதுரோகம் என தெரிவித்தார்.

கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம்

டெல்லி :

நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விளக்கம் அளித்துள்ளார். காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது. சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி, மன்னாயக்கன்பட்டி முத்தம்பட்டி, புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்தது

மும்பை :

ஒருநாள் சார்வுக்குப்பின் இந்திய பங்குச்சந்தைகள் மீட்சி பெற்று உயர்வுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 279 புள்ளிகள் அதிகரித்து 37,393 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 11,257 புள்ளிகளில் முடிந்தது.

கோட்சே இந்து தீவிரவாதி என்று பேசியதற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி :

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுகுப்தா எனபவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கும்பகோணம் அருகே 7 குழந்தைகள் உள்பட 50 கொத்தடிமைகள் மீட்பு: வருவாய் துறை

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே தேவன்குடி பகுதியில் 3 செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 7 குழந்தைகள் உள்பட 50 பேர்களை வருவாய் துறையினர் மீட்டுள்ளனர். மேலும் கொத்தடிமைகளாக வைத்திருந்தவர்கள் மீது வழக்குபதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான நலவாரியம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை :

தமிழகத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான நலவாரியம் அமைக்க டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை நல வாரியம் அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

மன்மோகனுக்கு ‘சீட்’ தருமா தி.மு.க.,? : அரசியல் பரபரப்பு

சென்னை;

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.

6 எம்.பி.,சீட் :

தமிழகத்தில், வரும் ஜூலையில் 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் தி.மு.க.,விற்கு 3 எம்.பி.,சீட்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா எம்.பி., பதவி காலம் ஜூன் மாதம் 14- ஆம் தேதியுடன் முடிகிறது. இவருக்கு இப்போது திமுக சார்பில் சீட் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த வாய்ப்பு 2020 :

தற்போது அசாமில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், அம்மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்யும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை. தி.மு.க., மன்மோகனுக்கு எம்.பி. சீட் வழங்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டும்.

ஏனெனில், வரும் 2020, ஏப்ரல் மாதத்தில் தான் 55 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிகிறது. எனவே, தி.மு.க., மூலம், மன்மோகனுக்காக சீட் பெற காங்கிரஸ் தலைமை முயற்சிக்கும் என்றே தெரிகிறது.

ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், மன்மோகன் எம்.பி., சீட்டையே, மத்திய அரசில் முக்கியமான இடத்தை பெறுவதற்கான பேரமாகவும் பயன்படுத்த தி.மு.க., முயற்சிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.ஏற்கனவே, தி.மு.க., சார்பில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி.,சீட் தருவதற்கும் லோக்சபா தேர்தல் உடன்பாட்டில் தி.மு.க., ஒத்துக்கொண்டுள்ளது. எனவே, வரும் மே-23 தேர்தல் முடிவுகளை பொறுத்தே இந்த விசயத்தில் தி.மு.க., தலைமை முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

மேற்குவங்கத்தில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் நாங்களே சரிசெய்து கொள்கிறோம் என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க… டெல்லி நீதிமன்றம் உத்தரவு.

டெல்லி:

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்சே இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் பரபர ட்வீட்;….

மும்பை:

நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி, கொலைகாரன். அவன் ஒரு இந்துவும் கூட. இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்தான் கோட்சே என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் அருண் காந்தி பரபரப்பான டிவீட் போட்டுள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் கூற்றுக்கு துஷார் அருண் காந்தி ஆதரவும் தெரிவித்துள்ளார். கமல் பேசியது சரியே என்றும் அவர் ஆமோதித்துள்ளார்.

கோட்சே குறித்து அவர் போட்டுள்ள ஒரு டிவீட்டில், நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி, கொலைகாரன், இந்து என்று பகிரங்கமாகவே சாடியுள்ளார் துஷார் காந்தி.

அடுத்த டிவீட்டில் நாதுராம் கோட்சே, இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக் கண். இங்கிருந்து கிளம்பிய விஷம்தான் இன்று வரை மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் என்று பரவியது. டபோல்கர், பன்சாரே, கல்பர்கி, கெளரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்று குவித்தது என்று காட்டமாக கூறியுள்ளார்.

இன்னொரு டிவீட்டில், கோட்சே, ஆப்தே கும்பல்கள் காந்தியைக் கொல்வதற்கு முன்பு 5 முறை முயற்சித்து தோல்வி அடைந்தனர். காந்தியைக் கொல்வதற்காக புனேவிலிருந்து பிராமணர்கள், சவார்க்கர் சமூகத்தவர், இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். அனைத்துமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய திட்டமிட்ட தீவிரவாத சதிச் செயல் காந்தி படுகொலை என்பதை அறியலாம் என்று கூறியுள்ளார் துஷார் காந்தி.

Genaral News

Post navigation

Previous Post: புதுச்சேரியில் 9 வயது சிறு பாலியல் வன்கொடுமை
Next Post: மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியாவின் முயற்சி வெற்றி பெறுமா???

Related Posts

ரத்தக்குழாய் அடைப்பை தடுக்கும் வழிமுறைகள் ரத்தக்குழாய் அடைப்பை தடுக்கும் வழிமுறைகள் Education News
Eco Friendly Electric Scooters launched to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies. Genaral News
Official Press Note from STR Genaral News
கலாம்  சலாம் - மெய்நிகர் அஞ்சலி-indastarsnow.com கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி Genaral News
Meendum Movie celebrity show நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் ! Genaral News
தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme