Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Mr Local படத்தில் நயன்தாராவுக்கும் எனக்குமான முத்தக் காட்சிகள்!!!!!!!

Posted on May 16, 2019May 16, 2019 By admin No Comments on Mr Local படத்தில் நயன்தாராவுக்கும் எனக்குமான முத்தக் காட்சிகள்!!!!!!!

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ வெற்றியை தொடர்ந்து நடித்திருக்கும் படம் ‘Mr.லோக்கல்’.எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், சதிஷ், தம்பி ராமையா என பெரிய காமெடி நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

வரும் மே 17 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, “வேலைக்காரன் படத்தில் எனக்கும் நயன்தாராவுக்கும் குறைவான காட்சிகள் தான் இருந்தது. ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லாமல், படம் முழுவதும் அவங்க வெயிட்டான ரோலில் நடித்திருக்கிறார்கள்.” என்றார்.

அப்படியானால் படத்தில் முத்தக் காட்சிகள் இருக்கிறதா?, நயன்தாராவுக்கு நீங்கள் முத்தம் கொடுத்தீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்க, “இந்த படத்தில் நயன்தாராவுக்கும் எனக்குமான காமினேஷன் காட்சிகள் அதிகமாக இருக்கிறது தான். ஆனால், அவை ரொமான்ஸ் காட்சிகள் அல்ல, நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள். எலியும், பூனையும் போல் படம் முழுவதுமே நாங்கள் சண்டை போட்டுக்கொண்டு தான் இருப்போம், பிறகு எங்கே முத்தம் கொடுப்பது.” என்று சிவகார்த்திகேயன் வருத்தத்தோடு பதில் அளித்தார்.

அதே சமயம், படத்தில் வில்லன் கிடையாது. அந்த வேலையையும் நயனே பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

Genaral News

Post navigation

Previous Post: தமிழ் படங்களை நிராகரித்த சொர்ணமால்யா! – ஏன் தெரியுமா?
Next Post: நாயே பேயே திரைபடத்தை 25 இயக்குனர்கள் துவக்கிவைதனர்

Related Posts

மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு? Genaral News
Singaporean entrepreneur Daisy Morgan teams up with renowned actress Nayanthara and acclaimed director Wikki to enter the skincare business. The official launch of 9skin in Kuala Lumpur, Malaysia, is scheduled to take place on Genaral News
மதன் கார்க்கி உற்சாகப்படுத்தியுள்ளது எது ! Genaral News
Lancor Launches “Harmonia”, India’s First ‘Blue Circle’ Townships for Senior Residences with Cross Generational Communities Lancor Launches “Harmonia”, India’s First ‘Blue Circle’ Townships for Senior Residences with Cross Generational Communities Genaral News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் Genaral News
டெல்லியில் அரசு பேருந்து, மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme