Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தமிழ் படங்களை நிராகரித்த சொர்ணமால்யா! – ஏன் தெரியுமா?

Posted on May 16, 2019May 16, 2019 By admin No Comments on தமிழ் படங்களை நிராகரித்த சொர்ணமால்யா! – ஏன் தெரியுமா?

தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த சொர்ணமால்யா, மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் திடீரென்று சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார்.

இந்த நிலையில், தான் படங்களில் நடிக்காதது எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இல்லை, எனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நானே தான் வேண்டாம் என்று நிராகரித்தேன், என்று சொர்ணமால்யா கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய சொர்ணமால்யா, “சினிமாவில் நடிகையாக ஜெயிக்க வேண்டும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. டிவியில் பிரபலமானாலும் எனக்கு என்று நிறைய கமிட்மெண்ட் இருந்தது. பரதநாட்டியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். பி.எச்.டி பட்டம் பெற்றேன். அதை தொடர்ந்து எனக்கு எதை செய்ய விருப்பமோ அதை செய்துக் கொண்டு பயணித்தேன்.

நான் தொடர்ந்து படங்கள் நடிக்காமல் போனது எனது தோல்வியல்ல, நானாகத்தான் பல படங்களை நிரகாரித்தேன். இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாரதிராஜா, லிங்குசாமி, வசந்த் என பல முன்னணி இயக்குநர்கள் என்னை நடிக்க அழைத்தும் நான் முடியாது என்று கூறிவிட்டேன். இப்போதும் கே.எஸ்.ரவிகுமார் என்னை பார்த்தால், அதிகமான படங்களை நிராகரித்த நடிகை என்றால் அது சொர்ணமால்யாவாக தான் இருக்கும் என்று கூறுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

Genaral News

Post navigation

Previous Post: இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நமது அம்மா!
Next Post: Mr Local படத்தில் நயன்தாராவுக்கும் எனக்குமான முத்தக் காட்சிகள்!!!!!!!

Related Posts

புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசிய சூப்பர் ஸ்டார். ரீ ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகும் ‘பாபா.’ புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசிய சூப்பர் ஸ்டார். ரீ ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகும் ‘பாபா.’ Genaral News
கந்தாரா திரைவிமர்சனம்.!! Genaral News
குக்கரில் மட்டன் பிரியாணி Genaral News
ராயல்ட்டி பிரச்சனை தொடர்ந்த இல்லயராஜா-எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு‼ Genaral News
Ranbir Kapoor, Sandeep Reddy Vanga, Bhushan Kumar, Pranay Reddy Vanga, T Series, Bhadrakali Pictures Animal First Look Unveiled Cinema News
Selvi Apsara visited the bereaved family of Football player Priya மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா நேரில் சென்று சந்தித்தார். Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme