மே, 16. (இன்னும் தினங்களில் தேர்தல் முடிவுகள் 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் எதுவும் ?நிறைவேறப்போவதில்லை என அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
அ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்பதே முக்கியம் என ஒட்டப்பிடாரத்தில் தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் வாக்குக்கு பணம் வழங்குகிறார்கள். அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சூலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் கூறியுள்ளார்.