இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நமது அம்மா!
சென்னை: இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்தது.
அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசிய போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் கமல்ஹாசனை விமர்சனம் செய்து நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய விடுதலைக்கு பிறகு, இந்திய விடுதலைக்கு பிறகு இந்துதான் முதல் தீவிரவாதி என்று உளறல் நாயகன் கமல்ஹாசன் உலகின் மூன்றாம் பெரும் சமயத்தை இழிவுபடுத்தி இருக்கிறார்.
என்ன செய்வது…
முடிந்து போன தனது கலையுலக வாழ்வை அரசியலை வைத்து சமன் செய்து கொள்ள அவர் செய்து வரும் பைத்தியக்காரத்தனங்களில் தலையாய ஒன்றுதான் இது போன்ற அவரது தரம் கெட்ட பேச்சும்.
தனி ஒருவரின் தவறை ஒரு மதத்தின் தவறாக சித்தரிப்பது என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிப்பதற்கு ஏதுமாக பொழுதுபோக்கோடு சமூகத்தை பழுது பார்க்கும் அறிவுசார் சாதனமாக பயன்பட்ட தமிழ் சினிமாவை சதைக்களமாக மாற்றிய இந்த சண்டாளனை என்னவென்று விமர்சிப்பது?
என்னதிது.. சைலன்டா இருந்த ஜீயர்கள் எல்லாம் இப்படி வயலன்ட்டா பேச ஆரம்பிச்சுட்டாங்களே
தங்கத்தை தரம் பார்த்து சொல்வதற்கு முன்னால் தாம் ஒரு உரை கல்லாக வாழ்ந்து காட்ட வேண்டுமென வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது உன்னத தலைவர்களாக வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் போன்றோர் கோலோச்சிய கலையுலகம் அன்று தரமான படங்களை தந்தது. கூடவே தயாரிப்பாளர்களையும் சரியாமல் பார்த்துக் கொண்டது என்றால் தன்னை வைத்து படமெடுத்த ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களையும் ஒட்டாண்டியாக்கிய இந்த கமல்ஹாசனை எப்படி விமர்சிப்பது?
கடவுளை விமர்சிப்பது
தாமதமின்றி தடை
ஒரு படத்தில் கடவுளை விமர்சிப்பது, மற்றொரு படத்தில் சைவத்தையும் வைணவத்தையும் சண்டைக்கு இழுத்து விடுவது, மற்றொரு படத்தில் தீவிரவாதம் இஸ்லாமியர்களுக்கே உரியது என்பது போல் முத்திரை குத்துவது, இப்படியாக மக்களிடையே பிளவையும் மதங்களுக்கிடையே சிண்டு முடிவதையும் வைத்து தன் பிழைப்பை ஓட்ட நினைக்கும் இந்த மனநோயாளியால் நடத்தப்படும் மக்கள் அநீதி மய்யத்தை தேர்தல் ஆணையம் தாமதமின்றி தடை செய்ய வேணடும்.
பொதுவுடைமைவாதி போல ஒரு நாள் வேஷம், பெரியாரிஸ்ட் போல மறுநாள் அவதாரம், ஆத்திரள் போலவும் அவ்வப்போது அவதாரம், நாத்திகன் போல பல நாள் பகல்வேஷம் இப்படியாக ஏறத்தாழ ஒரு முத்திப்போன பைத்திரயக்காரனாகவே தமிழகத்தை சுற்றி வரும் இந்த மொத்தமும் வில்லன் உடனடியாக இந்து மதத்தை இழிவுபடுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
சகிப்புத்தன்மை
பொறுப்பற்ற மனிதர்கள்
சகிப்புத்தன்மைக்கே இவ்வுலக சான்றாகவும் இம்மையில் செய்யு்ம பாலத்துக்கு மறுமையிலும் தண்டனை உண்டு என மனித பிழைகளை சுத்திகரிக்கும் மாமருந்தாகவும் திகழ்ந்து வரும் இந்து மதம், மதங்கள் கடந்த மனிதத்தை நேசிக்க செய்யும் மகோன்னத வாழ்வியல் முறை அல்லவா, ஆனால் இந்த உன்னதங்கள் எல்லாம் பொறுப்பற்ற மனிதர்களுக்கு புரியாது.
மக்களை பிளவுப்படுத்தி
கொட்டி கவிழ்க்கும் பரிதாபம்
அதேவேளையில் மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் தன் அரசியல் வாழ்வுக்கு ஆக்சிஜன் தேடும் இப்பேர் வழி தொடர்ந்து மதங்களை காயப்படுத்தும் காரியத்தை கைவிடாவிட்டால் நடிகனாக இதுநாள் வரை அவர் சேமித்து வைத்திருக்கும் பேரும் புகழையும் மொத்தமாக கொட்டி கவிழ்க்கும் பரிதாபம் விரைவில் நிகழ்ந்தே தீரும் என அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது