சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 65-வது பிறந்தநாள் நடந்து முடிஞ்சிடுச்சு.. ஆனா அன்றைய தினம் இந்த ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?
நம்ம முதல்வர் எப்பவுமே சிம்பிள்தான். ரொம்ப ஆடம்பரம், கொண்டாட்டம் இப்படி எந்த விஷயத்திலயும் ஈடுபட மாட்டார். கடந்த வருடம் பிறந்த நாள்கூட ரொம்ப எளிமையாதான் கொண்டாடினார்.
அன்னைக்கு டிடிவி தினகரன் ஒரு பக்கம், ஸ்டாலின் ஒரு பக்கம் என குடைச்சல் தந்தனர். ஆட்சி மாற்றம், ஆட்சி கவிழ்ப்பு என்று சொல்லி சொல்லியே பீதி கிளப்பினர். இதனால் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
டிடிவி தினகரன்
முக ஸ்டாலின்
அதே மாதிரிதான் இந்த பிறந்த நாளுக்கும்! இந்தமுறையும் டிடிவி தினகரன், ஸ்டாலினின் பகீர் பேச்சுகள், அதிடி நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதை தவிர தேர்தல் முடிவுகளும் எப்படி இருக்க போகிறதோ என்ற கலக்கமும் உள்ளது. இதனால் ஆடம்பரமின்றிதான் பிறந்த நாள் நடந்து முடிந்தது. பிறந்த நாள் அன்று, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தில் இருந்ததால், கழக நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் அமைச்சர்கள் தரப்பிலிருந்து சத்தமே காணோம்!
5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி
4 அமைச்சர்கள்
நமது அம்மா
ஒருவேளை கொண்டாட்டம், விழா என்று நடத்தினால் 4 தொகுதி இடைத்தேர்தலில் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றுகூட நினைத்திருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பில், நமது அம்மா நாளிதழ் உட்பட எந்த பத்திரிகையிலும் வாழ்த்து சொல்லி விளம்பரம் தர வேண்டாம் என்று முதல்வர் தரப்பே கேட்டு கொண்டாதாக சொல்லப்படுகிறது.
வாழ்த்து
பிறந்த நாள்
ஆனால் விஷயம் இது இரண்டுமே என தெரிகிறது. உண்மையிலேயே முதல்வருக்கு ஆதரவான அந்த 4 அமைச்சர்கள் மட்டும்தான் வாழ்த்து சொன்னார்களாம். வேறு யாருமே பிறந்த நாளில் ஆர்வம் காட்டவில்லையாம்.
அதிருப்தி
டிடிவி தினகரன்
அந்த அளவுக்கு எடப்பாடி மீது நிறைய பேருக்கு அதிருப்தி இருக்கிறதாம். இவர்களில் பெரும்பாலானோர் தினகரன் பக்கம் சாயவும் யோசித்து வருகிறார்கள் என்றும், எதையாவது வாழ்த்து சொல்லி விளம்பரம் பண்ண போய், அது பின்னாளில் பாதிப்பை தந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்களாம்.
அமைதி
புறக்கணிப்பு
இப்போதைக்கு அதாவது தேர்தல் முடிவு வரை அமைதி காப்பதே சிறந்தது என்றும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இப்படி ஒரு மனநிலைமையில் இருப்பதை அறிந்துதான் பிறந்த நாளை புறக்கணிக்க முதல்வர் முடிவு செய்தார் என்றும் மற்றொரு தரப்பு சொல்கிறது.
வாழ்த்து
தமிழிசை
இவர்கள் மட்டுமில்லை.. கூட்டணியில் உள்ள யாருமே முதல்வருக்கு வாழ்த்து சொல்லவில்லை. கொஞ்சம் லேட்டாக வந்து வாழ்த்தியது தமிழிசை மட்டும்தான்! அதனால் தேர்தல் முடிவுகள் வந்தால்தான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்.