Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் !!!!!!

Posted on May 13, 2019 By admin No Comments on அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் !!!!!!

அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
தற்போது அவர் சிறை சென்ற இரண்டு வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ஜெ., வழியில் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து.. தமிழிசை ட்விட்.

முதல் திட்டம் என்ன


அதன்படி சசிகலா இன்னும் சில நாட்களில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த உள்ளார். இதன் மூலம் அவரது தண்டனை 4 வருடம் என்பது உறுதியாகும். அந்த அபராதத்தை கொடுக்கவில்லை என்றால், சசிகலா கூடுதல் நாட்கள் சிறையில் இருக்க வேண்டும். இதனால் விரைவில் சசிகலா இந்த அபராதத்தை செலுத்துவார் என்கிறார்கள்.

அடுத்த திட்டம் என்ன

இதற்கு அடுத்தபடியாக டிஐஜி ரூபா சசிகலா மீது கொடுத்து இருக்கும் 2 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் இருந்து வெளியே வர வேண்டும் என்று முடிவெடத்து இருக்கிறார். இந்த புகார் சசிகலாவின் நன்னடத்தையை பாதிக்கும் என்பதால், அதில் இருந்து எப்படியாவது வெளியே வர சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். ஜூலை மாத இறுதிக்குள் இந்த புகாரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று டிடிவி தினகரன் தரப்பு நம்புகிறது.

என்ன நிலவரம்

இதனால் பெரும்பாலும் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இன்னும் 5-6 மாதத்தில் வெளியே வருவார் என்கிறார்கள். அதாவது, வரும் நவம்பர் மாதம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 100 கைதிகள் வரை நன்னடத்தை விதியின் படி வெளியேற இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் இந்த விடுதலை நடக்கும்.

வருவார் வர வாய்ப்பு

இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலில் ஏற்கனவே சசிகலா பெயர் இடம்பெற்றுள்ளது. இதை காரணமாக வைத்துத்தான், சசிகலாவை மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் இது எல்லாம் சசிகலாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே நடக்கும். அந்த சான்றித

Health News

Post navigation

Previous Post: மே.வங்கத்தில் பதற்றம்.. தேர்தலுக்கு சில மணி நேரம் முன்னர் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்
Next Post: சென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்.. 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம்

Related Posts

கஷாயம் வாரம் - தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்-indiastarsnow.com கஷாயம் வாரம் – தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம் Health News
புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு...நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க் புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு…நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க் Genaral News
இளநீர் செவ்விளநீர் இளநீர் செவ்விளநீர் நன்மை Health News
CHENNAI HERNIA SOCIETY ANNOUNCES It’s FELLOWSHIP COURSE ON ADVANCED LAPROSCOPIC SURGERY FALS HERNIA 2022 Health News
மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள் Health News
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.95 ஆக உயர்வு Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme