அயோக்யா திரைப்படம் குறித்து அந்தப் படத்தில் நடித்த பார்த்திபன் விமர்சனம் செய்துள்ளார். அயோக்யா திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 1994ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தை லவுட்டி தன்னையே நடிக்க வைத்தது என்ன ஒரு அயோக்கியாத்தனம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கதை திருடியது குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? என இயக்குநருக்கு கேள்வி எழுப்பிய பார்த்திபன், வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் எனவும் கூறியிருந்தார்.
நடிகர் பார்த்திபனின் இந்த ட்வீட் அயோக்யா படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சமூகவலைதளங்களிலும் வைரலானது. இந்நிலையில் தனது ட்வீட்டின் பின்னணி குறித்து பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ரசிகர்கள்! ‘அயோக்கியா’-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை!. ‘டெம்பர்’ வரும்போது தெரியாது. தமிழாகும் போது தெரியும். இதை கூடிப்பேசி கூத்தடிப்போம் ஷூட்டிங் ஸ்பாட்டில்.